⭕ சுவாமி மலை, திருத்தணி முருக பெருமானின் படை வீடு கிடையாது⭕

தாரகாசூரனை வதைக்க முருக பெருமான் தோன்றிய படை வீடில் ஒன்று ஏரகம்.

தமிழ்ச் சங்க இலக்கியத்தில் நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப் படையில்  கூறப்படும் முருக பெருமான்  அரக்கர்களை எதிர்த்து படை எடுத்த இடங்களே படை வீடுகள் எனப்படும்.

இவை

1. ஏரகம் - ஒரே ஒரு கோயில்.
2. குன்றுதோறாடல் - பல குன்று கோயில்களில் முருக பெருமான் அசரர்களுக்கு எதிராக செய்த  திருவிளையாடல்கள்.
3. திருஆவினன் குடி - பழநீ மலையின்  அடிவாரம். இது ஒரே ஒரு கோயில். தாரகாசூரனை வதைத்த இடம் இதுதான்.

இவை மூன்றும் சேர நாட்டில் உள்ளவைகள்.

4. பழமுதிர்ச்சோலை - முருக பெருமான் வள்ளியை மணம் முடித்த இடம்தான் இக்கோயில். இது ஒரே ஒரு கோயில்.

5. பரங்குன்றம் எனப்படும் திருப்பரங்குன்றம் - தன் தாய் மாமாவின் மகளான பெருமாளின் மகளும், இந்திரனால் வளர்க்கப்பட்டவளுமான தெய்வானையை மணந்து தேவர்களின் சேனாதிபதியான இடம். இது அடிவாரத்தில் உள்ள ஒரே ஒரு கோயில்.

6. திருச்சீர்அலைவாய் என்ற  திருச்சிந்தூர் - குன்றில் இல்லாமல் நீரான கடலில் படை கொண்ட ஒரே வீடு.
தாரகாசூரன் இறந்த உடன் அவரது தளபதிகளான சூரபத்மன், சிங்கமுகன் இருவரும் கடலுக்குள் போய் மா மரமாக ஒளிந்து கொண்டார்கள். அவர்களை வதைத்து அசுரனை மயிலாகவும், சிங்கமுகனை சேவலாகவும் ஆக்கி சரணாகதி கொடுத்த இடம். திரு+சிந்து+ஊர் என்றால் திரு+கடல்+ஊர் என்று திருச்சிந்தூர் என்று பொருள்.சிந்து என்றால் கடல் என்று பெயர்படும். தற்போது பேச்சு வழக்கில் திருச்சிந்தூர் திருச்செந்தூர் ஆனது.

இவை மூன்றும் பாண்டிய நாட்டில் உள்ளவைகள்.

இவற்றில் ஏரகம் என்பதை மலை நாட்டகத்தே ஒரு திருப்பதி என்று நச்சினார்க்கினியர் உரை நூல் தெளிவாக கூறுகிறது.

திருச்செங்கோட்டில் உள்ள கைக்கோளர் தெருவில் பாவடி அருகில் உள்ள 1522 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டில் "குன்றத்தூர் சீமை எழுகரை நாட்டுக்குள்ளான கீழ்க்கரை பூந்துறை நாட்டில் அர்த்தாரீஸ்வர தம்பிரானார் குமாரர் தம் படை வீடான திருச்செங்கோடு" என்று திருச்செங்கோடுதான் ஏரகம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

⭕  திருச்செங்கோடு பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில்

"ஏரக நாயக ஆடுக செங்கீரை"

"ஆடும் பதம் பரவும் மேல் ஏரகத்து வளர்
ஆறுமுகத்தர் அருளே"

"குங்குமம் நாறும் தடஞ்சுனை ஏரக கொட்டுக சப்பாணி"

⭕ திருச்செங்கோட்டு கோவை எனும் நூலில் 367 வது பாடலில்

"சூரகம் தோயச் சுடர்வேல் எடுத்த சுவாமி நின்ற ஏரகம்காண்இது"

⭕ திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலையில் நூலில்

"ஏரகத்தார் படித்தரத்துக்கு ஈந்ததாமே"

"ஏரகம் தன்னில் வருணன் திசையினில்"

"இறையென வாழும் நாளில் ஏரகம் பிறப்பித்தானே"

"ஏரகம்சேர் வாசியான வடிவேலர்"

'ஏரகத்தில் மருவும் பருத்தி நன்னாடு"

என்று தெளிவாக பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இலக்கியங்களும் திருச்செங்கோடு தான் ஏரகம் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருச்செங்கோட்டில்தான் கண்ணகி கோவலனை அடைந்தாள் என்று "நெடுவேள் குன்றம்" என்று திருச்செங்கோடு குறிப்பிடப்பட்டு உள்ளது. நெடுவேள் என்றால் முருக பெருமான்.

திருச்செங்கோடு தான் நெடுவேள் குன்றம் என்று சிலப்பதிகாரம் உரையாசிரியர் தெளிவாக  குறிப்பிடுகிறார்.

முருக பெருமான் தாரகாசூரனை வதைக்கதான் நம் உலகிற்கு அவதாரம் புரிந்தார். சிவபெருமானுக்கும் சக்திக்கும் பிறந்த மகனால்தான் தனக்கு மரணம் வர வேண்டும் என்று வரம் வாங்கி இருந்தான் தாரகாசூரன்.

அப்போது தச்சன் மகள் தாட்சாயிணி இறந்து இருந்ததால் சிவனுக்கும் சக்திக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்ற தைரியத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தான் தாரகாசூரன்.

தேவர்கள் வேண்டியதற்கு இணங்க சக்தி, பார்வதியாக அவதாரம் புரிந்து திருச்செங்கோட்டில் சிவனை அடைய மரகத லிங்கத்திற்கு பூஜை செய்து கொண்டு இருந்தாள். இந்த மரகத லிங்கம் சிலை கடத்தல் கும்பலால் திருடப்பட்டு ஈரோடில் ஒரு லாட்ஜில் வைத்து திரு. பொன் மாணிக்கவேல் அவர்களால் சாமர்த்தியமாக பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதியின் தேவலோக ஆத்மார்த்த லிங்கம் என்பதால் மேசானிய பௌத்த அரக்க கும்பல் இதை குறி வைத்தது.

அன்று பார்வதியின் தவத்தால் மகிழ்ந்த சிவன், பார்வதியை தன் பாகமாக ஏற்றுக் கொண்டாள். அது வரை சிவ பெருமானை வணங்கிக் கொண்டு இருந்த பிருங்கி முனிவர் பார்வதியை வணங்க மறுத்தார். அப்போது சிவனும் சக்தியும் ஒன்றுதான் என்று அர்த்தநாரீஸ்வரர் வடிவை சிவபெருமான்  எடுத்த உடன் முருக பெருமான் திருச்செங்கோடில் ஆறு முகத்துடன், ஆறுமுகங்கள் உடைய ஷட்கோண சக்கரத்திற்கும் பன்னிரண்டு கைகள் உடன் ஆறுமுகச்சாமியாக பிறந்தார்.

வெள்ளையர் காலத்தில் மைசூர் மகாராஜா என்ற பிரீமேசன் பார்வதியின் ஆத்மார்த்த மரகத லிங்கத்திற்கும், ஆறுமுகச்சாமி சிலைக்கு அடியில் இருந்த ஆறுமுகங்கள் உடைய ஷட்கோண சக்கரத்திற்கும் பூஜை செய்து கொண்டு இருந்த சேரமான் பெருமாளால்  நியமிக்கப்பட்ட ஆனங்கூர்  ஐயம்பாளையம் மடாதிபதி கோயிலுக்குள் வரக்கூடாது என்று தடை செய்தான். அடுத்த கட்டமாக ஆறுமுகங்கள் கொண்ட செங்கோட்டு வேலவர் சிலையை அறுத்து எடுத்து அதன் அடியில் இருந்த ஆறுமுக யந்திரம் திருடப்பட்டு விட்டது.

இதை செய்தது உள்ளூரில் முருக பெருமானின் நிலத்தை ஏப்பம் விட்டுக்  கொண்டு இருந்த பிரீமேசன் வெள்ளையனால் நியமிக்கப்பட்ட அன்றைய குமரமங்கலம் ஜமீன்தார். காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவிய மேசானிய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலத்தின் முப்பாட்டன்தான் இந்த குமரமங்கலம் ஜமீன்தார்.
திருச்செங்கோடு அழித்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் உள்ள கோயில்கள்கள் அழிய வேண்டும் என்ற மேசானிய நோக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியது இந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தாத்தாவான டாக்டர்.சுப்பராயன் என்ற பிரீமேசன் பிரீமியர். மதறாஸ் மாகாண பிரீமியராக இருந்த இந்த மேசானிய அயோக்கிய பயல் ராஜாராம் மோகன்ராயின் பிரம்மோ சமாஜ் மதத்திற்கு மாறி துளுவ விதவைப் பெண்ணை வைத்திருந்து பின்  திருமணம் செய்து கொண்டான்.

பழைய ஆறுமுக செங்கோட்டு வேலவர் சிலையை மலை மேல் உள்ள குமார தீர்த்தத்தின் உள்ளே குமாரமங்கலம் ஜமீன் போட்டு விட்டான் என்று இன்று வரை மக்கள் சாபம் கொடுத்து வருகின்றனர். இன்று வரை இது இல்லை.

மேலும் கவுண்டர்,நாடார் மற்றும் பிற சமுதாயங்களை அழிக்க இவர்களின் குலகுரு முறையை ஒழித்து அனைவரையும் பிரம்மோ சமாஜ மதம் மாற்றதான் இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கி கோயில்களை குலகுருக்களின் கட்டுபாடில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கினான் இந்த குமாரமங்கலம் ஜமீன் டாக்டர் சுப்பராயன்.

இதனால் முருக பெருமானின் அடிமைகளான கொங்கு கவுண்டர் சமுதாய பெரியோர்கள் ஜமீன் என்றால் முருகனை விட பெரிய இவனோ என சுப்பராயனை ஜாதியை விட்டு தள்ளி வைத்தனர். இதனால்தான் திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியில் நிற்க வழி இல்லாமல் திருச்சியில் போய் நின்றார் ரங்கராஜன் குமரமங்கலம். அங்கு Sea Horse மருத்துவமனையில் சம்பத்தை சத்ருவாக்கி எப்படி காலி செய்யப்பட்டார் என்றும், இதற்கு யார் ஆடிட்டர் ? என்றும் பதிவு செய்ய விரைவில் சென்னி மலை ஆண்டவர் சாயப் பட்டறை செல்லங்கள் மூலமாக உத்தரவு தருவாரா என பின்னர் பார்ப்போம்.

இதற்கு அடுத்த கட்டமாக பிரீமேசனால் சிருங்கேரி மடத்தின் கும்பகோணம் குளையை உடைத்து காஞ்சி சங்கர மடம் 1839 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கும்பகோணம் தெலுங்கு அந்தணர்களின் குடும்ப சொத்தாக உள்ள காஞ்சி சங்கர மடத்தின் பெரியவாள்களின் குல தெய்வம்தான் சுவாமி மலை.

https://m.facebook.com/story.php?story_fbid=1468973506594603&id=100004459025108

சுவாமி மலையை ஏரக மலையாக மாற்ற டெல்டா பகுதியில் மலைகள் இல்லாததால் கல் சுவர் எழுப்பி மண்ணை கொட்டி மலை போல  உயர்த்தப்பட்டது. அதனால் அது மலை இல்லாத டெல்டா பகுதியில் சுவாமி 'மலை'  ஆனது.

சுவாமி மலை ஒரு சக்தி வாய்ந்த முருக பெருமான் கோயில் என்பதில் மாற்றம் இல்லை. அது படை வீடே அல்ல.

இப்போது அடுத்த கட்டமாக கண்ணகி திருச்செங்கோடில் உச்சியில் உள்ள வரடி கல் மேல்தான் வேங்கை மரத்தின் அடியில் கோவனை அடைந்தாள் என்பதற்காக சேலம் பிரீமேசன் லாட்ஜ் மெம்பர் ராஜாஜி, ஈவெரா மற்றும் பிரீமேசன்களால்  அறுபது வருடங்களுக்கு முன் அந்த பிரம்மாண்ட  வேங்கை மரம் அகற்றப்பட்டது.

தற்போது வஞ்சிக்காண்டம் என்ற கரூர் சேர நாட்டில் நடந்த இந்த கண்ணகி சிலப்பதிகார பகுதியை மறைக்க மோசடிகள் தொடர்ந்து நடக்கின்றன. இதை அன்றே உணர்ந்த இளங்கோவடிகள் கண்ணகியை
"கொங்கச் செல்வி குடமலையாட்டி" என்று கொங்கு பகுதிதான் சேர நாடு என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.

சில வருடங்களுக்கு முன் தெலுங்கு ஜமீன்தார் உருவாக்கிய மலம புரம் மங்களாதேவி கோயிலை கண்ணகி கோயில் என்று குளப்பி விட்டு வரலாற்றை மாற்றும் மோசடியும் நடந்து வருகிறது.

கொங்கு நாட்டு குரவர்கள்தான் கண்ணகியை கோவலனோடு செல்வதை பார்த்தவர்கள் என்று சிலப்பதிகாரம் நமக்கு சாட்சியாக கூறுகிறது.

இன்றும் கொங்கு பகுதி குரவர் ஜாதிகள் கண்ணகியை குல தெய்வமாக வைத்து  கண்ணகி பாட்டு என பாடி கொண்டாடுகின்றனர்.

தற்போது திருச்செங்கோடு ஏரக படை வீட்டை படை வீடு பட்டியலில் இருந்து எடுத்து பாடல் பெற்ற சிவஸ்தல வரிசையில் சேர்த்து விட்டார்கள் மேசானியர்கள்.

திருஞானசம்பந்தர் பேரூரில் பாடிய தேவாரம் பதிகத்தை திருச்செங்கோடு என மாற்றி விட்டு பேரூரை சிவஸ்தல பட்டியலில் இருந்தே மாற்றி விட்டார்கள். ஆனால் அனைத்து ஓலைச் சுவடிகளிலும் கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் பேரூர்தான் உள்ளதே தவிர திருச்செங்கோடு இல்லவே இல்லை. இதை மறைத்து குழப்பி விடதான் பேரூர் தமிழ் முறை டூப்ளிக்கேட் ஆதீனம் உருவாக்கப்பட்டது.

திருச்செங்கோடு ராஜ கோபுரத்திற்கு நேராக உள்ளதும், கிழக்கு பார்த்த பிரதான சந்நிதியாக உள்ளதும் "செங்கோட்டு வேலப்பர்" சந்நிதிதான்.

அர்த்தநாரீஸ்வரர் சிறிதாகவும், ராஜ கோபுரம் இல்லாமலும், மேற்கு பார்த்து சிறிய வாசல் உடன் உள்ளது.

திருச்செங்கோட்டு வேலப்பனுக்கு தண்டாயுதத்தை வழங்கி பழநீ திருஆவினன்குடி படை வீட்டுக்கு தாரகாசூரனை கொல்ல அனுப்பும் விதமாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கையில் தண்டாயுதம் உள்ளது.ஈஸ்வரன் பிரதானமாக இல்லை என்பதற்கு சூலாயுதம் இல்லாமல் தண்டாயுதம் இருப்பதே இதன் சாட்சி.
இந்த தண்டாயுதத்தை பெற்று தாரகாசூரனை முருக பெருமான் பழநீ திருஆவினன்குடியில் தண்டத்தை வைத்து அடித்தே சம்ஹாரம் செய்தார்.

குன்றுதோறாடல் படை வீடுகளில் முதல் ஸ்தலமான சென்னி மலை படை வீடுக்கு முருக பெருமான் கோவித்துக் கொண்டு சென்றதால் அர்த்தநாரீஸ்வரர் மேற்கு பார்த்து சென்னி மலையை நோக்கி உள்ளார். சென்னி மலை ஆண்டவர் அர்த்தநாரீஸ்வரரை பார்த்து கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார்.

தாரகாசூரனை ஏமாற்ற்றி திசை திருப்பவே விநாயக பெருமான், முருக பெருமானின் ஞானப்பழம் என்ற மாம்பழ  திருவிளையாடல் நடைபெற்ற இடமும் திருச்செங்கோடு படை வீடுதான்.

இதை எல்லாம் மறைத்து நம்மை திருச்செங்கோடு படை வீடுக்கு செல்ல விடாமல் ஒழித்து கட்டதான் மாதொரு பாகன் என்ற புத்தகத்தை கேவலமாக எழுத ஃபோர்டு பவுண்டேஷன், டாடா பவுண்டேஷன் நிதி உதவியுடன் பெருமாள்முருகன் என்ற கஞ்சாப்பயலை வைத்து குருமூர்த்தியின் சாகித்ய அகாடமி விருது டிராமா அன்று  நடைபெற்றது.

திருச்செங்கோடில் இதனால்தான்  இங்கு உள்ள ஆறுமுகசாமி பெயர் கொங்கு பகுதியில் வீடுதோறும் ஆறுமுகம், சண்முகம், கொங்கப்பன்,சுப்ரமணி, செங்கோட்டு வேலப்பன்,சுப்பராயன், செங்கோட்டையன், செங்கோடன் போன்ற பெயர்கள் உள்ளது.
பாவாயி பாவாத்தா பெயர்கள் அர்த்தநாரீஸ்வரருக்கு உண்டு.

சோழ நாடு,தொண்டை நாடுகளில் முருக பெருமானின் போருக்கு படை வீடுகள் கிடையாது.

திருத்தணி என்பது முருக பெருமானின் ஞானப்பழ கோவம் தணிந்து, தணிகை மலை முருகனாக சிவபெருமானுடன் மீண்டும் அமர்ந்த இடம்.
திருத்தணியும் போர் புரிந்த படை வீடு அல்ல.

Comments