Posts

⭕ சுவாமி மலை, திருத்தணி முருக பெருமானின் படை வீடு கிடையாது⭕ தாரகாசூரனை வதைக்க முருக பெருமான் தோன்றிய படை வீடில் ஒன்று ஏரகம். தமிழ்ச் சங்க இலக்கியத்தில் நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப் படையில்  கூறப்படும் முருக பெருமான்  அரக்கர்களை எதிர்த்து படை எடுத்த இடங்களே படை வீடுகள் எனப்படும். இவை 1. ஏரகம் - ஒரே ஒரு கோயில். 2. குன்றுதோறாடல் - பல குன்று கோயில்களில் முருக பெருமான் அசரர்களுக்கு எதிராக செய்த  திருவிளையாடல்கள். 3. திருஆவினன் குடி - பழநீ மலையின்  அடிவாரம். இது ஒரே ஒரு கோயில். தாரகாசூரனை வதைத்த இடம் இதுதான். இவை மூன்றும் சேர நாட்டில் உள்ளவைகள். 4. பழமுதிர்ச்சோலை - முருக பெருமான் வள்ளியை மணம் முடித்த இடம்தான் இக்கோயில். இது ஒரே ஒரு கோயில். 5. பரங்குன்றம் எனப்படும் திருப்பரங்குன்றம் - தன் தாய் மாமாவின் மகளான பெருமாளின் மகளும், இந்திரனால் வளர்க்கப்பட்டவளுமான தெய்வானையை மணந்து தேவர்களின் சேனாதிபதியான இடம். இது அடிவாரத்தில் உள்ள ஒரே ஒரு கோயில். 6. திருச்சீர்அலைவாய் என்ற  திருச்சிந்தூர் - குன்றில் இல்லாமல் நீரான கடலில் படை கொண்ட ஒரே வீடு. தாரகாசூரன் இறந்த உடன் அவரது தளபதி